2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மவுசு குறைந்த ஸ்ரேயா...

Menaka Mookandi   / 2012 மே 27 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இடுப்பழகி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் நடிகை ஸ்ரேயா. தற்போது தமிழில் வாய்ப்பிழந்து விட்டார். விரைவில் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறிவரும் ஸ்ரேயா, முதன்முறையாக கன்னடத் திரையுலகிற்கு இறங்கியுள்ளார்.

கன்னடத்தில் சந்திரா என்ற திரைப்படத்தில் நடித்துவரும் அவர், இந்த திரைப்படத்திற்காக தனது சம்பளத்தைக் கூட வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளாராம்.

ஸ்ரேயாவின் தற்போதைய மார்க்கெட் ரேட் 70 முதல் 80 இலட்சம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கன்னட மார்க்கெட்டில் அந்த அளவுக்கு தந்தால் கம்பனிக்கு சரிவராது என்று  அவரிடம் எடுத்துக் கூறப்பட்டதால் தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டாராம் ஸ்ரேயா.

கன்னடத் திரைப்படத்துக்காக எவ்வளவு சம்பளத்திற்கு ஸ்ரேயா நடிக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அங்கு முதலிடத்தில் உள்ள குத்து ரம்யாவுக்கு தரப்படும் சம்பளமே ஸ்ரேயாவுக்கும் தரப்படுவதாக கூறப்படுகிறது.

முதலில் ரம்யாவைத்தான் இந்த திரைப்படத்திற்காக அழைப்பு விடுத்தார்களாம். ஆனால் சில பல காரணங்களால் அவர் மறுத்து விட்டாராம். பிறகு அமலா போலை நாடினார்கள், தியா மிர்ஸாவை தேடினார்கள், அம்ரிதாவை நாடி ஓடினார்கள். எல்லோருமே விலகிப் போனதால் ஸ்ரேயாவை 'ப்ரீஸ்' செய்து 'பிக்ஸ்' பண்ணி விட்டனர்.

இந்த திரைப்படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் ஸ்ரேயா. திரைப்படத்தை இயக்குவது ரூபா ஐயர். இதில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்களாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X