2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெறும் கவர்ச்சிக்காக மட்டும் நடிக்க மாட்டேன்: கார்த்திகா

Menaka Mookandi   / 2012 மே 30 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயக்குநர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கவிருக்கும் திரைப்படம் எம்.ஜி.ஆர் (மத கஜ ராஜா). இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக தெரிவாகியிருந்தவர், ராதாவின் மகள் கார்த்திகா. தற்போது, தான் அந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கார்த்திகா.

இந்தத் திரைப்படத்தின் கதையில் இயக்குநர் சுந்தர் சி செய்த மாறுதல் தனக்கு திருப்தியாக இல்லாததால் அதிலிருந்து விலகுவதாக அவர் காரணம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'என்னிடம் இயக்குநர் சுந்தர் சொன்ன கதை ஒன்றாகவும், இப்போது அவர்கள் எடுக்கவிருப்பது வேறு கதை என்றும் தெரிய வந்தது. என்னை வெறும் கவர்ச்சிக்காக மட்டும்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

மேலும் முதலில் சொன்ன கதையில் விஷால் மூன்று வேடங்களில் நடிப்பார் என்றார்கள். இப்போது அதிலும் மாறுதல். இரண்டு ஹீரோயின்கள் வேறு. எனவே எனக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. இந்தப் படத்தில் நான் விலகினாலும், சுந்தர் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன்' என்றார்.

ஏற்கெனவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் விலகிக் கொண்டார் ஹன்சிகா. இப்போது சரத்குமார் மகள் வரலட்சுமி இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.





You May Also Like

  Comments - 0

  • mohan Sunday, 24 June 2012 05:01 AM

    உனக்கு ஒரு நடிப்பு தேவைதானா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X