2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புகைப்பிடிப்பதை கைவிட்டார் ரஜினி...

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'புகைப்பிடிப்பதை நான் விட்டுவிட்டேன். நீயும் அந்தப் பழக்கத்தை விட்டுவிடு' என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்க்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

கன்னட நடிகர் அம்பரீஷின் 60ஆவது பிறந்தநாள் விழா பெங்களூரில் நடைபெற்றுள்ளது. இதில், தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்று அம்பரீசின் 40 ஆண்டு கால திரையுலக சாதனைகளை பாராட்டினர்.

இந்நிகழ்வில் சூப்பர் ஸ்டாரும் நேரடியாகக் கலந்துகொண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், 'அம்பரீஷ் திறமையான நடிகர். அவரிடம் கிருஷ்ணர், பீமன், சகுனி, துரியோதனன் அம்சங்களைப் பார்க்கிறேன். சமையலில் பீமனுக்கு நிகர் அவர். பிரியாணி சாப்பிடுவதற்காக அவரது வீட்டுக்கு போவேன். கர்ணனைப் போன்ற கொடையாளி.

துரியோதனனைப் போல அனைத்து நல்லது கெட்டதுகளையும் அறிந்தவர் அவர். துரியோதனனைப் போலவே, கெட்ட விஷயம் தெரிந்த பிறகும் விடாமல் இருக்கிறார்.

புகைப் பிடிப்பதனால் வரும் பாதிப்புகள் அம்பரீஷுக்கு தெரியும். ஆனாலும் அதை அவர் விடவில்லை.

புகைப் பழக்கத்தால்தான் என் உடல்நிலை இந்த அளவு பாதிக்கப்பட்டது. அதனால் நான் அடியோடு அதை விட்டுவிட்டேன். அம்பரீஷ், நீயும் இந்தப் பழக்கத்தை இன்றோடு விட்டுவி' என்று கூறியுள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • manithan Friday, 01 June 2012 02:07 PM

    ரொம்ப லேட் ரஜினி ...

    Reply : 0       0

    sooriyan Tuesday, 05 June 2012 03:24 AM

    கண் கெட்ட பின் சூரிய நமஷ் காரம்

    Reply : 0       0

    Rathika Monday, 11 June 2012 10:34 AM

    லேட்டா வந்தாலும் லேடஸ்ட வருவார் ரஜினி. அது அவர் பாணி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X