2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளன்': பார்த்திபன்

Menaka Mookandi   / 2012 ஜூன் 05 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளன் என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார். இசைஞானி இளையராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பிறந்தநாள் விழா நேற்று திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

'பால் நிலாப் பாதை' என்ற நூலை நடிகர் கமல்ஹாசனும் 'எனக்கு எதுவோ உனக்கும் அதுவே' என்ற நூலை கவிஞர் மு.மேத்தாவும் இவ்விழாவின் போது வெளியிட்டு வைத்தனர்.

இதில் நடிகர் பார்த்திபனும் கலந்து கொண்டு இளையராஜாவை வாழ்த்தியுள்ளார். இது குறித்து தனது முகநூலில் பார்த்திபன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். 

நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்!

உடல் ரீதியாக அல்ல, மனரீதியாக. ஒரு வார்த்தை ஏற்கனவே நம்முள் பதிவு செய்திருக்கும் அர்த்தத்தை மீறி புதிதாய் ஒன்றை விதைப்பதற்குள், அதிர்ச்சி முட்கள் முளைத்து விடுகின்றன.

ஓரின சேர்க்கை பற்றி புதிதாய் நான் ஒன்று சொன்னாலும், அது 'இனத்தோடு இனம் சேரும்', 'கற்றோரை கற்றோரே காமுறுவர்' அடிப்படையிலேயே.

ஆற்றல் மிகுந்த ஒரு கலைஞனின் ஆளுமையில், அதை தன்னுள் வாங்கிக்கொள்ள ஏங்கும் கலைஞனின் மனம் கவ்விக்கொள்கிறது. பச்சையாக சொல்வதானால் மனதோடு மனம் கலவிக் கொள்கிறது. ஈர்ப்பால் காதல் கொள்ள எதிர்பால் தேவை படுவதில்லை.

இதைத்தான் ஓரின சேர்க்கையாளன் என்றேன். மகா கலைஞன் இளையராஜாவின் இசை மீது நான் கொண்டிருக்கும் காதலை இவ்வாறு மொழி பெயர்த்தேன்... என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.

You May Also Like

  Comments - 0

  • nafa Wednesday, 06 June 2012 11:00 AM

    இத விட நல்லாவே சொல்லலாம்.

    Reply : 0       0

    awmjawahir Thursday, 07 June 2012 05:09 AM

    athukku.. Ippadiththaanaa solrathu???

    Reply : 0       0

    IBNUABOO Friday, 08 June 2012 01:25 PM

    மானம் கெட்ட உவமானம் செரிமானம் இல்லா கலை ஞானம்

    Reply : 0       0

    jaya Tuesday, 26 June 2012 05:06 PM

    பாவாம் இல்லையா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X