2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கதக் ஆடும் கமல்...

A.P.Mathan   / 2012 ஜூன் 08 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


திரையுலகில் சகலகலா வல்லவன் என அன்பாக அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிரத்தையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர் கமல். அவரது மனதில் கடந்த 7 வருடங்களாக உட்கார்ந்திருந்த விஸ்வரூபத்தை தனது ரசிகர்களுக்காக படமாக்கியிருக்கிறார். விஸ்வரூபம் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற ஐஃபா நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்தோடு அப்படத்தின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

ஆன்ட்ரியா ஜெரிமியாவுடன் கதக் ஆடும் கமல் எல்லோர் மனதையும் வியக்க வைத்திருந்தார். எந்தக் கதாபாத்திரத்தை எடுத்தாலும் அக்கதாபாத்திரமாகவே மாறிவிடுகின்ற கமலுக்கு கதல் ஆடும் கதாபாத்திரம் மட்டும் என்ன சலிக்கவா போகிறது? ஆன்ட்ரியாவுடன் கதக் ஆடுகின்ற கமல் சூப்பர். ஆன்ட்ரியாவை விட கமல்ஹாசன்தான் இதில் அழகாக, நடனத்துக்கே உரிய பெண்மை மிளர காணப்படுகிறார். நடனத்துக்கு முதல் முக்கியமாக நளினம் கமலிடம் அதிகமாகவே காணப்படுகிறது.

இப்படத்தில் நடிக்கப் போவதற்கு முன்பு வரை கதக் பற்றி கமலுக்கு கேள்வி ஞானம் மட்டும்தானாம். ஏற்கனவு பரதக் கலையில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் கதக் நடனத்தை விஸ்வரூபம் படத்திற்காக பிரத்தியேகமாக கற்றிருக்கிறார். கதக் மேதையான குருஜி பிர்ஹு மஹராஜிடம் மிகக் குறுகிய காலத்திற்குள் கதக் நடனத்தைக் கற்றுக் கொண்டு அதை படத்தில் அழகாக பயன்படுத்தியிருக்கிறார். இந்த பிர்ஹு மஹராஜ்தான், தேவதாஸ் படத்தில் மதுரி தீட்சித்தை கதக் ஆட வைத்து அனைவரையும் மயக்கியவர்.

விஸ்வரூபம் படத்தில் இடம்பெறும் நடனக் காட்சியில் பிர்ஹு மஹராஜின் கதக் பள்ளியைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் வந்து ஆடி நடனத்திற்கும், பாடலுக்கும் மேலும் உயிர் கொடுத்துள்ளனராம்.

தீவிரவாதம், காதல், குடும்பம் என சுழலும் விஸ்வரூபம் எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி திரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0

  • IBNUABOO Sunday, 10 June 2012 04:38 AM

    சகலகலாவல்லவன், உலக நாயகன், இதயும்விட உயர்ந்த பட்டங்கள் இருந்தால் தேடிக்கொடுங்கள். அத்தனை திறமையின் சிகரமான தடிகர். தமிழ் சினிமாவின் பிராணவாயு இவர்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X