2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அனுஷ்காவின் சாகசம்...

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சியொன்றின் போது டூப் இன்றி நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.

திரைப்படத்தின் கதைப்படி ரயிலில் செல்லும் கார்த்தியையும், அனுஷ்காவையும் வில்லன்கள் ஹெலிகொப்டரில் துரத்துகின்றார்கள். அந்தக் காட்சியில் ரயிலின் மேல் கார்த்தியும், அனுஷ்காவும் நடந்து செல்ல வேண்டும். 

திடீர் என்று அவர்கள் இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அப்போது அனுஷ்கா டூப் வேண்டாம் நானே குதிக்கிறேன் என்று கூறினாராம். அதன் பிறகு ரயிலை மெதுவாக இயக்கச் சொல்லி அனுஷ்காவை குதிக்க வைத்தனராம் திரைப்படக் குழுவினர். 

இந்த ஒரு காட்சியை இரண்டு கோடி ரூபா செலவில் 15 நாட்களில் படமாக்கியுள்ளாராம் இயக்குநர். அனுஷ்காவின் இந்த சாகசக் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்படும் என்கிறார் இயக்குநர் சுராஜ்.




You May Also Like

  Comments - 0

  • priya Wednesday, 11 July 2012 05:23 AM

    உங்க‌ அழகு எப்படி தினமும் கூடுமா? எப்படி இப்படி எல்லாம் முடியுது உங்களால் மட்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X