2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கோயிலுக்கு ஆசைப்படாத ஹன்ஸிகா...

Menaka Mookandi   / 2012 ஜூன் 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


குஷ்புவுக்கும் நமீதாவுக்கும் கோயில் கட்டி அழகு பார்த்த தமிழ் ரசிக மகாஜனங்கள், சின்ன குஷ்பு என்ற அடைமொழியுடன் வலம் வரும் ஹன்ஸிகாவுக்கும் கோயில் கட்டத் தயாராகியுள்ளனர்.

இடமெல்லாம் பார்த்து, செங்கல், கருங்கற்கள் கூட வாங்கத் தயாரான நிலையில் 'வேண்டாம்... வேண்டாம் எனக்கு கோயில் கட்ட வேண்டாம்' என அறிவித்துள்ளார் ஹன்ஸிகா.

ஹன்சிகாவுக்கு மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கொயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அங்கு காணியொன்றைத் தேர்வு செய்துள்ள ரசிகர்கள், கோயில் நிர்மாணப் பணிகளுக்காக நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.

எதிர்வரும் செப்டம்பரில் கோவில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கும் என்றும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது ஹன்சிகா கோவில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு பூஜை செய்ய பூசாரி ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார்.

இது குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, 'சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை அணுகி கோவில் கட்ட அனுமதி கேட்டனர். எனக்கு கோவில் கட்டப்போவதாக அவர்கள் சொன்னதும் என் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொண்டேன்.

ஆனால் மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவது தவறானது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ரசிகர்கள் கோவில் கட்டக்கூடாது. அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன்' என்றார்.





You May Also Like

  Comments - 0

  • memoo Sunday, 17 June 2012 10:16 AM

    சிறந்த காமெடி ............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X