2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சினிமா சிந்தனையை பிற்போட்டுவிட்டேன்: ஐஸ்வர்யாராய்...

Menaka Mookandi   / 2012 ஜூன் 18 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


'நான் ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதில் ஆனந்தம் அடைகிறேன். எனவே, இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. சினிமாவை பற்றிய சிந்தனையை பிற்போட்டுள்ளேன். எதிர்காலத்தில் எவ்வாறான கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்று சொல்ல முடியாது' என அறிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யாராய்.

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். 38 வயதான அவர், தனது குழந்தை மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் லண்டன் சென்றுள்ளார். இந்திய வம்சாவழி இங்கிலாந்து எம்.பி. ஒருவர் அளித்த விருந்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் லண்டன் சென்றுள்ளனர்.

அங்கு ஐஸ்வர்யாராய் அளித்த பேட்டியொன்றின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'எனது வாழ்க்கையில் சிறப்பான தினம் எது என்றால், அது அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நாள்தான். இந்த திருமண பந்தம் திடீரென ஏற்பட்டதுதான். எங்களுக்குள் இயற்கையான உறவு உள்ளது. அதை மேலும் மேம்படுத்தி வருகிறோம்' என்றார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்துள்ள அபிஷேக் பச்சன், 'எனது குழந்தையுடன் போதிய நேரத்தை நான் செலவிடவில்லை. குழந்தையின் எல்லா தேவைகளையும் ஐஸ்வர்யாவே நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் நான் தவறு இழைத்தவன் ஆகிறேன்.

அன்றாடம் நாம் கனவு உலகில் வாழ்கிறோம். போல்பச்சன் திரைப்படத்தில் அஜய்தேவ்கனுடன்இணைந்து சிறப்பாக நடித்துள்ளேன். அந்தப் படம் ஜூலை 6ஆம் திகதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் எனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது என்பது தவறானது. இந்த திரைப்படத்தின் மூலம் எங்களின் நட்பு வளர்ந்துள்ளது' என்று கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X