2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சூர்யாவுக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு...

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


சினிமா நட்சத்திரங்களுக்கு கார்களை பரிசாகக் கொடுத்து தங்களது தயாரிப்புக்களை எளிதாக பிரபல்யப்படுத்திக் கொண்டு வருகின்றன சொகுசு கார் நிறுவனங்கள்.

அந்தவகையில் ரசிகர்களின் தற்போதைய கனவு நாயகனாகத் திகழும் நடிகர் சூர்யாவுக்கு ஏ - 7 ஸ்போர்ட்ஸ்பேக் பிரீமியம் செடான் காரை பரிசாக கொடுத்துள்ளது பிரபல அவ்டி கார் நிறுவனம்.

80 இலட்சம் இந்திய ரூபாய் (கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்) மதிப்புள்ள இந்த கார் சூர்யாவுக்கு பரிசாகக் கிடைத்துள்ளது என்று மோட்டார் விகடன், தனது முகப்புத்தகப் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளது.

பொலிவூட் (இந்தி திரையுலக) நட்சத்திரங்களுக்கு மாத்திரமே இதுவரை விலையுயர்ந்த கார்களை பரிசளித்து வந்த அவ்டி நிறுவனம் தற்போது தமிழ்த் திரையுலகினருக்கும் அவ்வாறான பரிசுகளை வழங்க முன்வந்துள்ளது.

அந்நிறுவனத்தின் பரிசு மழையில் நனைந்த தமிழ்த் திரையுலகின் முதல் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X