2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிரபுவை துப்பாடாவால் மறைக்கும் நயன்தாரா

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெலுங்குத் திரையுலக இசைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் நடத்தப்படும் எம்.ஏ.ஏ இசை விருது விழா அண்மையில் ஹைதராபாத் நகரில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தெலுங்குத் திரைப்படங்களுடன் தொடர்புடைய அனைத்து சினிமாக் கலைஞர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் நடிகை நயன்தாராவும் கலந்துகொண்டிருந்தார். அவரது கையில் குத்தப்பட்டுள்ள 'பிரபு' எனும் பச்சையை
புகைப்படக் கலைஞர்கள் அனைவரும் பலவாறான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் இருப்பினும் பச்சையை மறைக்கும் வகையில் நயன்தாரா தனது சுடிதார் துப்பட்டாவினால் கையை மறைத்துச் சென்றதாகவும் இந்திய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் நயன்தாராவும், பிரபுதோவாவும் காதலித்தனர். நயன்தாராவை சட்டரீதியாக திருமணம் செய்துகொள்வதற்காக பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்தும் செய்தார். இந்நிலையில், நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிட்டது.

இருப்பினும் பிரபுதேவாவுடனான காதலின் போது நயன்தாரா தனது கையில் குத்திக்கொண்ட பச்சை இன்னமும் அழிக்கப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரை குறித்த விழாவில் கண்டுள்ள புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர் குத்தியுள்ள பச்சையை படம் பிடிக்க பலவாராக முயற்சித்ததாகவும் அந்த முயற்சி பயனளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நயன்தாரைவை அடியோடு மறந்துவிட்டதாகவும் இனி அவரைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் எனவும் பிரபுதேவா அறிவித்துள்ளார். இத்தனை நாட்களும் அவரைப் பற்றி பேசக்கூடாது என்று இருந்தேன். இப்போது பதில் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் ஏதோ ஒன்று பேச விடாமல் தடுக்கிறது.

எனவே இந்த விடயம் பற்றி பேச விரும்பவில்லை. அவரைப் பற்றி கேட்க வேண்டாம். அது முடிந்து போன விடயம். இப்போது எதையும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. அதை மறந்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்கிறேன். அதுதான் என் வழக்கம் என்று தெரிவித்துள்ளார் பிரபுதேவா.

'நயன்தாரா வெளிப்படையாக பேசுவது அவரது விருப்பம். அதற்கொல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. அவர் சொல்வதெல்லாம் என்னை பாதிக்காது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னை பொறுத்தவரை கடவுள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. அவர் என்னை நல்ல பாதையில் வழி நடத்துவார்' என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரபுதேவா.




You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Friday, 22 June 2012 01:31 PM

    காதலுக்கு கன் மட்டுமல்ல நீதி நியாய மனிதாபமுமில்லை. இது ரம்லத்தின் சாபம். இப்படி நடக்குமென்று நாங்கள் முன்கூட்டி ஆருடம் கூறினோம். நயந்தாரவின் கையில் அடுத்து குத்தபோகும் பச்சை யார் பெயரோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X