2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்ட மனீஷா...

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல்வன், இந்தியன், பாபா போன்ற திமிழ்த் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை மனிஷா கொய்ரலா. இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையாகவும் விளங்கியவர்.

ஒரு காலத்தில் இவருடன் இணைத்துப் பேசப்படாத முன்னணி நடிகர்கள் குறைவு என்றே கூற வேண்டும். நடிகர்களைத் தாண்டி வெளிநாட்டு தூதர்களுடனும் நெருக்கமாக பேசப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டில் நேபாளத்தைச் சேர்ந்த சாம்ராத் தாஹப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் நடிப்பதை நிறுத்திவிட்ட மனீஷா கொய்ராலாவின் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச ஆரம்பித்தது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மனீஷா, விவாகரத்துக்கான மனுவொன்றையும் தாக்கல் செய்தார். மணவாழ்க்கையில் விடுதலை அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட, மும்பையில் குடியேறி இரவு விருந்துகளில் பங்கேற்று வந்தார்.

அவர் போதையில் தள்ளாடியபடி பார்களிலிருந்து வெளியேறும் காட்சிகள் நாளிதழ்களில் அடிக்கடி இடம்பெற ஆரம்பித்தன. முன்னணி நடிகர், நடிகைகள் மனிஷாவின் நிலை கண்டு பரிதாபப்பட்டார்கள். பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

இந்நிலையில், மனிஷாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மும்பையின் ஐந்து நட்சத்திர பார்களில் அடிக்கடி பார்க்க முடிந்த நடிகை மனீஷா கொய்ராலா, இப்போது சதா சர்வகாலமும் சுற்றிக் கொண்டிருப்பது மும்பை, நேபாளத்தில் உள்ள கோயில்களைத்தானாம்.

உல்லாச வாழ்க்கை வெறுத்துப் போய், ஆன்மீக வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாராம். இதனால் தன் சொந்த நாடான நேபாளத்தில் உள்ள இந்துக் கோயில்களுக்கும் சென்றுவர ஆரம்பித்துள்ளார். சென்னையில் உள்ள ஒன்னஸ் தியான மையத்துக்கும் அடிக்கடி வர ஆரம்பித்துள்ளாராம் மனீஷா.



You May Also Like

  Comments - 0

  • Hamzath Tuesday, 26 June 2012 11:44 AM

    இவர்களுக்கு போதையும் காம போதை தரும் ஆண்களும் புதிதான விசயம் ஒன்றல்ல

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X