2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முத்தமழை பரிமாறும் நயன் - த்ரிஷா...

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக பனிப்போர் நடத்தி வந்த இரு கதாநாயகிககள் இன்று அந்நியோன்யமாகியுள்ளனர்.

அவர் வாய்ப்பை இவர் பறித்தார், இவர் வாய்ப்பை அவர் தட்டிவிட்டார் என்று அவருடைய ஆசை நாயகனுடன் இவர் பேசினால் இவருடைய ஆசை நாயகனுடன் அவர் பேசினார் என நீண்ட காலமாக இவர்கள் இருவருக்கும் இடையில் பனிப்போரே நடந்து வந்தது.

நடிகைகளான நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோர் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து வந்த செய்திகள் மற்றும் கிசுகிசுக்கள் இவை. அதற்கேற்ற மாதிரிதான் இருவரும் நடந்து கொண்டனர்.

தத்தமக்கு வேண்டப்பட்ட நிரூபர்களை இரகசியமாக அழைத்து இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுத்ததெல்லாம் நடந்தது. அது தவிர ஏதாவது விழாக்களில் கூட இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் நடந்த தனியார் விருது விழாவொன்றில் இருவரும் அப்படி இழைந்தார்கள். திடீரென்று இருவரும் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' என்ற அளவுக்கு கட்டிப் பிடித்து கூடிக் குலாவினார்கள்.

விழா முடிந்ததும் வழக்கமாக நடைபெறும் பார்ட்டியில் வழிந்த சரக்குகளை விட 'செம ஹாட் மச்சி' எனும் அளவுக்கு இவர்களின் ஷோ நடந்ததாம். இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிய வேடிக்கைப் பார்த்தார்களாம் சக கலைஞர்கள்.

நயன்தாரா - த்ரிஷா சண்டை மூண்டது விஜய் நடித்து சிறகொடிந்து போன குருவியிலிருந்துதான் என்பது கோலிவுட் ரசிகர்களுக்கு புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியல் இல்லை...! 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X