2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அஜீத்தை இயக்கும் நயன்தாரா...

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன், ஆர்யா, தப்ஸி நடிக்கும் திரைப்படம் சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது. அஜீத் ரசிகர்களுக்கு அந்தத் திரைப்படம் பற்றிய தகவல்கள் விசேட செய்தி. தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அப்படத்தின் உதவி இயக்குனர் யார் என்பதும் விசேட செய்தியே.

அவர் வேறு எவரும் இல்லை. நடிகை நயன்தாரா தான் இந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதுவும்,  நடிப்பதற்கு முக்கியத்துவம் என்பதை விட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளிக்கிறாராம்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் வந்தால் எழுந்து நிற்பது, கிளப் போர்ட் அடிப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவது, கடைசி ஆளாக போவது என உதவி இயக்குனர் செய்யும் அனைத்துப் பணிகளையுமே பார்க்கிறாராம் நயன்.

பெண் இயக்குனர்கள் பட்டியலில் தனது பெயரையும் முன்னிறுத்த தான் இந்த ஐடியாவாம். இப்படத்தில் உதவி இயக்குனர் பட்டியலில் நயன்தாரா பெயர் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • Getroot Wednesday, 11 July 2012 03:45 AM

    யாருக்கு எதிராக அம்மணி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X