2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கமலுடன் ஹொலிவூட் செல்லும் சூர்யா...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாயகன் கமல் ஹாசன் ஹொலிவூட் திரைப்படமொன்றில் நடிக்கப் போகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால், இன்றைய புதிய செய்தி என்னவென்றால், கமலுடன் இணைந்து தமிழ்த் திரையுலகத்தைச் செர்ந்த மற்றுமொரு நாயகனும் ஹொலிவூட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் சூர்யா.

தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏற்ற வகையில் தன்னை மாற்றிக்கொண்டு தனது கதாபாத்திரத்துக்காக மிகவும் கஷ்டப்படுபவர்.

உலக நாயகன் கமல் ஹாசன் வரிசையில் அடுத்த இடத்தில் இருப்பவர் சூர்யா என்றால் மிகையாகாது.

அவர் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து நடித்த மாற்றான் விரைவில் வெளியாகவிருக்கிறது. அடுத்ததாக சிங்கம் 2, துப்பறியும் ஆனந்தம் ஆகிய திரைப்படங்களில் நடிக்கிறார்.

இத்தனை நாட்களாக கோலிவூட்டை கலக்கிய சூர்யா, தற்போது ஹொலிவூட்டிலும் காலடி பதிக்கப் போகிறார்.

உலக நாயகன் கமல் ஹாசனின் ஹொலிவூட் திரைப்படத்தில் நடிக்குமாறு சூர்யாவை கேட்டுள்ளாராம் கமல்.

ககுமல் அழைத்து சூர்யா மறுக்கவா போகிறார்?. அப்படி என்றால் கமல், சூர்யா ஆகிய இருவரையும் ஒன்றாகவே ஹொலிவூட் திரைப்படத்தில் பார்க்கலாம்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .