2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முத்தத்துக்கு உகந்தவர் பிரியங்கா...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் விஜயின் 'தமிழன்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் இந்தித் திரையுலகிற்குச் சென்று அங்கு தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துக்கொண்டவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தெரிவாகிய இவர், திரையுலகில் ஒரு பாடகியாகவும் வலம் வந்துள்ளார்.

இவையெல்லாம் சினிமா வாசகர்களைப் பொறுத்தமட்டில் பழைய தகவல்கள் என்றே கூற வேண்டும். ஆனால், இன்று பிரியங்காவைப் பற்றிய புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

முத்தமிடுவதற்கு உகந்த நடிகை யார் என்ற கருத்துக் கணிப்பொன்றை இந்திய இணையத்தளமொன்று நடத்தியுள்ளது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா ராயும், மூன்றாமிடத்தை நடிகை கரீனா கபூரும் பெற்றுள்ளனர்.

அழகான உதடுகள், முத்தமிடத் தூண்டும் கவர்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த தேர்வு இடம்பெற்றதாக இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு வாக்களித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரைப்படங்களில் முத்தமிடுவதில் புரட்சி படைத்தவர் பிரியங்கா சோப்ரா என்று திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகின்றது. அக்னீபாத், பெஃஷன், 7 கூன் மாப், காமினே, அய்த்ராஸ் என பல திரைப்படங்களில் இவருக்கு முத்தக் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Wednesday, 22 August 2012 09:59 AM

    அத எப்படி ஐயா நம்புறது.? முடிஞ்சா எங்களுக்கும் ஒரு சான்ஸ் தரச் சொல்லுங்க. நாங்களும் பரிசோதிச்சுப் பாத்துட்டுச் சொல்றம்.

    Reply : 0       0

    muzarrath Thursday, 23 August 2012 09:25 AM

    முத்தத்துக்கு நல்லவ போலருக்கு! ம்ம்..... என்ன செய்யலாம்?

    Reply : 0       0

    anaf Sunday, 02 September 2012 10:46 AM

    அத எப்படி ஐயா நம்புறது.? முடிஞ்சா எங்களுக்கும் ஒரு சான்ஸ் தரச் சொல்லுங்க. நாங்களும் பரிசோதிச்சுப் பாத்துட்டுச் சொல்றம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X