2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சூர்யாவின் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் நான் இல்லை. என் பெயரில் இந்த தளங்களில் உள்ள கணக்குகள் போலியானவை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

பேஸ்புக், ட்விட்டரில் அநேகமாக பல நட்சத்திரங்களும் கணக்கு தொடங்கி, தங்களது பக்கங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா பெயரிலும் பேஸ்புக்கில சிலர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாற்றான் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி வெளியாவதாக சூர்யாவே அறிவித்துள்ளது போல் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து சூர்யா விளக்கமளித்துள்ளார்.

'என் பெயரில் போலியாக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் சிலர் பதிவுகளை மேற்கொண்டு வருவதாக அறிந்தேன்.

ஏதோ நான்தான் தினமும் இப்படி செய்வதாக ரசிகர்கள் நினைக்க வாய்ப்புள்ளது. இது தவறு. ரசிகர்கள் நம்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் அதிகாரப்பூர்வமற்ற போலி பேஸ்புக் கணக்கை 1.3 இலட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Saturday, 25 August 2012 03:40 PM

    சூர்யாண்ணே,
    நீங்களும் ஒரு பேசுபுக்கு அக்கவுன்டு ஆபிசியிலா ஆரம்பிச்சாப் போச்சு. சோதிகா அண்ணி வீட்ல சும்மாதானே இருக்காக. . அவங்ககிட்ட அந்த வேலய கொடுத்தா பாத்துப்பாக.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X