2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அஜித்தைப் பார்த்து வியந்த நயன்...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் அஜித் குமாரின் புதிய தோற்றத்தைப் பார்த்த நடிகை நயன்தாரா ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டாராம். விஷ்ணுவர்தன் திரைப்படத்துக்காக அஜித் குமார் - ஜிம் சென்று தனது உடலை கும்மென்று வைத்துள்ளார். அஜித் பெரிய தொப்பை வைத்திருக்கிறார் என்று கிண்டலடித்தவர்களே ஆச்சரியப்படும் வகையில் தொப்பையைக் குறைத்துள்ளார்.

விஷ்ணுவர்தன் திரைப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, தப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. சிலகாலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த நயன், அஜித்தின் புதிய தோற்றத்தைப் பார்த்து அசந்துவிட்டாராம்.

அட 2007ஆம் ஆண்டு பில்லா திரைப்படத்தில் பணியாற்றியபோது இருந்த மாதிரியே ஸ்லிம்மாக இருக்கிறாரே அஜித் என்று வியந்து கூறியுள்ளார். அஜித்தின் முடி நரைத்தாலும் அவர் இன்னும் இளமையாகத் தான் உள்ளார் என்று நயன் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் திரைப்படத்தில் காட்டும் ஈடுபாட்டை அவர் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.




You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Sunday, 26 August 2012 02:35 PM

    அந்தக் குடும்பத்தையும் கவுத்துடாதீங்கோ தாயே!

    Reply : 0       0

    muzarrath Tuesday, 28 August 2012 10:26 AM

    அஜித்! இது அது இல்ல! கவனம் சார்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X