2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கண்ணீருடன் வெளியேறினார் அனுஷ்கா...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, அதன் கதாநாயகி அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

'அலெக்ஸ் பாண்டியன்' திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் அவர் தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதைப் பார்த்த மேகப்பன் யூனியனைச் சேர்ந்தவர்கள் கோபப்பட்டுள்ளார்களாம்.

தாங்கள் இருக்கும் போது அனுஷ்கா எப்படி தனியாக ஒரு பெண்ணை அதுவும் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகாதவரை அழைத்து வந்து மேக்கப் போட வைக்கலாம் என்று கொதித்தெழுந்துவிட்டார்களாம் மேக்கப் யூனியனைச் செர்ந்தவர்கள்.

இதையடுத்து மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30பேர் அடங்கிய குழுவொன்று 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு நிலையத்துக்கு வந்து அனுஷ்காவுக்கு மேக்கப் போடும் பெண்ணை அங்கிருந்து வெளியேறச் சொன்னார்களாம்.

மேலும் அவர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷ்கா அங்கிருந்து அழுது கொண்டே ஓடிவிட்டாராம்.

நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி தலையிட்டு மேக்கப் யூனியன் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனுஷ்காவுக்கு மேக்கப் போட்ட பெண்ணை வெளியேற்றிய பின்னரே மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Wednesday, 29 August 2012 01:11 AM

    ஐயோ.. இதுக்கெல்லாம் அழ வேணாம் புள்ள. அந்தப் பொண்ணையும் மேக்கப் ஆட்டிஸ்ட் யூனியன்ல சேத்துட்டா போச்சு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X