2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கார்த்தியுடன் டூயட் பாட அனுமதி கேட்கும் அனுஷ்கா...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


'அலெக்ஸ் பாண்டியன்' திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் டூயட் பாட இயக்குனர் செல்வராகவனிடம் அனுமதி கேட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.

நடிகை அனுஷ்கா செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஜோர்ஜியா நாட்டுக்கு பறந்துவிட்டார். இதற்கிடையே அவர் கதாநாயகியாக நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' திரைப்படத்தில் நாயகி இல்லாமல் கார்த்தியால் டூயட் பாடமுடியவில்லை.

இதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர் அனுஷ்காவுக்கு போன் மேல் போன் போட்டதுடன் ஏராளமான ஈ - மெயில் அனுப்பி உடனே சென்னை வாருங்கள், நீங்கள் நடிக்க வேண்டிய பாகங்கள் ஷூட் செய்ய வேண்டியுள்ளன என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓயாது போன் ஒலித்ததையடுத்து அனுஷ்கா செல்வராகவனிடம் சென்று விபரத்தைக் கூறி சென்னை செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரும் அனுமதி அளிக்கவே அனுஷ்கா சென்னைக்கு வந்தார். வந்த கையோடு கார்த்தியோடு டூயட் பாடச் சென்றுவிட்டாராம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X