2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முடிவு கண்டார் சிம்பு...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 02 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் இணைந்து நீண்ட நாட்களாக நடித்துவரும் 'போடா போடி' திரைப்படத்தை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வருகிறார் சிம்பு. திரைப்படம்  இறுதிக் காட்சியை எட்டிவிட்டதாம். அதனால் திரைப்படத்தின் படப்பிடிப்பினை விரைவில் முடித்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி நாயகியாக அறிமுகமாகும் திரைப்படம்தான் இந்த 'போடா போடி'. நீண்ட காலமாக இந்த திரைப்படம் இழுத்துக் கிடக்கிறது. வரலட்சுமியே நொந்து போய் விட்டார். அந்த அளவுக்கு திரைப்படத்தை இழுத்தடித்துவிட்டார் சிம்பு.

வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது வேகம் பிடித்துள்ளதாம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரை முடித்து விட்டார்களாம். எனவே எப்படியும் இந்தப் படம் வெளியாகி விடும் என்று நம்புகிறார்கள்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஒரு நடனத்துடன் கூடிய பின்னணியில் படமாக்கியுள்ளனராம். இந்த நடனத்தில் சிம்பு, வரலட்சுமியுடன், பழைய நடிகை ஷோபனாவும் நடனமாடியுள்ளாராம்.

செப்டம்பர் 6ஆம் திகதி டிரெய்லரை வெளியிட்டு விட்டு படத்தை விரைவில் கொண்டு வரும் திட்டம் உள்ளதாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X