2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கணவருடன் மட்டும் நடிப்பதான செய்தி பொய்: ஐஸ்வர்யா ராய்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 04 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


கணவர் அபிஷேக் பச்சனுடன் மட்டும்தான் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று வெளியாகியுள்ள தகவலுக்கு ஐஸ்வர்யா ராய் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ள அவர்கள், சரியான கதாபாத்திரம் அமைந்தால் பிற நடிகர்களுடன் ஐஸ்வர்யா நடிப்பார் என்றும் கூறியுள்ளனர்.

அபிசேக்பச்சனை திருமணம் செய்துகொண்ட பின்னர் விளம்பரம், திரைப்படங்களில் பல நடிகர்களுடன் நடித்து வந்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தை பிறந்த பின்னர் நடிப்பிற்கு இடைவெளி விட்டுள்ள ஐஸ்வர்யா, திரைப்பட விழாக்களில் பங்கெடுத்துக் கொண்டார்.

இதனிடையே முதன் முதலாக நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த நிலையில் இனிமேல் ஐஸ்வர்யா ராய் கணவருடன் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு ஐஸ்வர்யாவின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் இமேஜை குலைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் குழந்தை பிறந்த பின்னர் ஐஸ்வர்யாராய் மீண்டும் புதுப்பொலிவுடன் மாறிவருவதாகவும், அவர் கண்டிப்பாக சிறந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் ஐஸ்வர்யாவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் கடைசியாக 2010ஆம் ஆண்டு குஷாரிஷ் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X