2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிகினிக்கு தாவிய சதா...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. சில நாட்களாக தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தற்போது அவரது சினிமா மார்க்கெட் சுத்தமாக ஓய்ந்துப் போய் கிடக்கிறதாம்.

எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் மைதிலி என்ற திரைப்படத்தில் வரலாறு காணாத கவர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளாராம் சதா.

பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் கவர்ச்சிக் களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றியுள்ளார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் பிரளயம் செய்துள்ளாராம்.

நவ்தீப்புடன் இணைந்து நடித்துள்ள ஒரு பாடல் காட்சியில் பிகினியிலும் பின்னி எடுத்திருக்கிறார் சதா. படம் முழுவதும் சதாவின் கவர்ச்சி மழைதானாம். அந்த அளவுக்கு சதாவை புதிய உருவத்தில் காட்டியுள்ளாராம் இயக்குநர் சூரியராஜா.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X