2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஜயுடன் ஜோடி சேரும் சமந்தா...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஷங்கர், மணிரத்னம் என மிகப்பெரிய இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்புக்களை உதறிவிட்டு, சிகிச்சையிலிருந்த நடிகை சமந்தாவுக்கு இப்போது மீண்டும் பெரிய வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கியுள்ளன.

அதில் முக்கியமான ஒன்று, இயக்குநர் விஜய் - நடிகர் விஜய் இணையும் புதிய திரைப்படம். இந்த திரைப்படத்துக்கான பூர்வாங்க வேலைகளில் இயக்குநர் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

திரைப்படத்தின் நாயகியாக சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர் விஜய் விரும்பியதால், அவரது கால்ஷீட்டுக்காக அணுகியுள்ளனர். சமந்தா இப்போது புதிதாக இரு தெலுங்கு திரைப்படங்களை ஒப்புக்கொண்டுள்ளதால், அதற்கேற்ப திகதியை சமாளித்துவிட்டு சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

இது குறித்து அண்மையில் சமந்தா குறிப்பிடுகையில், 'பெரிய இயக்குநர்களின் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தம்தான் என்றாலும், தவிர்க்க முடியாத சூழலில் அந்த முடிவு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது மீண்டும் அதற்கு இணையான வாய்ப்புகள் வந்துள்ளன' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X