2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நான் ஐஸ்வர்யா போன்று அழகில்லை: பிரியங்கா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகையும் முன்னாள் அழகியுமான ஐஸ்வர்யா ராய் போன்று நான் பெர்பெக்ட் இல்லை, அழகும் இல்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பேசுகையில்,

'நான் பரேலியில் வாழ்ந்தவள். அங்கிருந்து போஸ்டன் சென்று அங்குள்ள பள்ளியொன்றில் சேர்ந்து படித்தேன். அங்கு நான் இனவாதப் பிரச்சனைகளை சந்தித்தேன்.

சில சிறுமிகள் என்னை ப்ரவுனி என்று அழைத்தார்கள். அமெரிக்க பள்ளியில் படித்ததில் நிறைய பாடம் கற்றுக்கொண்டேன். நம்பிக்கையுடன் செயற்பட கற்றுக்கொண்டேன்.

நான் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் போன்று பெர்பெக்ட் கிடையாது. அவரைப் போன்று அழகும் இல்லை. எனக்கு நடிக்கத் தெரியாமல், அழகிப் போட்டியில் வெற்றி பெறத் தெரியாமல் இருந்தது. ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையும் எனக்கு ஒவ்வொன்றைக் கற்றுக்கொடுத்தது. ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

பாதி இந்தியாவுக்கு ஆட்டிஸம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் நான் 'பர்பி' திரைப்படத்தில் ஆட்டிஸம் பாதித்தவளாக நடித்துள்ளேன். என்னுடைய அல்பம் எதிர்வரும் 13ஆம் திகதியும், 'பர்பி' திரைப்படம் 14ஆம் திகதியும் வெளியாகின்றன. அதில் மக்களுக்கு எது பிடிக்கும் என்று தெரியவில்லை' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X