2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிசு கிசு எழுதினால் வழக்கு: அசின்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர்களுடன் இணைத்து என்னைப் பற்றி கிசு கிசு எழுதினால் வழக்கு தொடர்வேன் என்று அச்சசுறுத்தல் விடுத்துள்ளார் நடிகை அசின்.

பொலிவூட் திரையுலகையும் கிசுகிசுவையும் பிரிக்க முடியாது. எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் மும்பை பத்திரிகைகளிடம் அவல் போன்று சிக்கி அந்து வெந்து போவது இன்றும் தொடர்கிறது. அதற்கேற்ற வகையிலேயே நடிகைகளின் வாழ்க்கை முறையும் அமைந்துள்ளமை வேதனைக்குரியது.

தமிழில் நடித்தவரை ஊடகங்களில் நல்ல பெயரோடு இருந்த அசின், மும்பை போனதும் திரைப்படத்துக்கொரு நடிகர் என இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

ஷாருக்கானுடன் உறவு, அமீர்கானுடன் இரகசிய உறவு, சல்மான்கான் வீடு வாங்கிக் கொடுத்தார், சல்மான் படுக்கையறையில் இருந்தார் என்றெல்லாம் அசின் தொடர்பான கிசுகிசுக்கள் தொடர்கின்றன.

இப்போது மீண்டும் சல்மான்கானுடன் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை அடுத்து நடிகை அசின் மிகவம் கோபத்தில் உள்ளாராம். அந்த கோபத்தின் உச்சம் மும்பை ஊடகங்கள் மீது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இது தொடர்பில் அசின் தெரிவித்துள்ளதாவது,

'நிறைய நடிகர்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்களை தொடர்ந்து எழுதி வருகிறார்கள், இதை என்னால் சகிக்கவே முடியவில்லை. நானும் குடும்பப் பெண்தான். நடிகர்களுடன் இதுபோல் ஒன்றாக சேர்ந்து வாழ நான் நினைத்து இருந்தால் சினிமாவுக்கு வந்துதான் அதை செய்ய வேண்டும் என்று இல்லை.

இனி இப்படி கிசுகிசு பரப்பினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன். வழக்கு தொடர்ந்து உள்ளே தள்ளிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்' என்று கூறியுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X