2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கட்டிப்பிடித்து உறவை நிரூபித்த த்ரிஷா...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 12 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் அண்மையில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டனர்.  இருவரும் தனிமையில் நெருக்கமாக அமர்ந்தபடி பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததை தெலுங்கு பத்திரிகைகள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.

ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிச்சயதார்த்தத்தில், த்ரிஷாவுக்கு ராணா மோதிரம் அணிவித்தாராம்.

ஆனால் த்ரிஷா இதை மறுத்ததோடு, நாங்க இன்னும் ப்ரெண்ட்ஸ்தான் என்று கூறி வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து கொஞ்சிக்கொண்டிருந்தார்களாம்.

இந்த விருந்துக்கு த்ரிஷாவும், ராணாவும் ஒரே காரில் ஜோடியாக வந்தார்கள். வந்ததும் ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, தனியாகப் போய் கட்டி அணைத்தபடி உட்கார்ந்து பல மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

விருந்துக்கு வந்தவர்கள், இந்த ஜோடியின் நெருக்கத்தைப் பார்த்து, அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பினார்களாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X