2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிபாஷா பாசுவுக்கு வைரஸ்...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட பொலிவூட் நடிகை பிபாஷா பாசு, மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சுதிர் டகோன்கர், 'காய்ச்சல் மற்றும் சோர்வால் அவதிப்பட்ட பிபாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்' என்று கூறியுள்ளார்.

வீடு திரும்பிய பிபாஷா டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது,

'நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி அறிந்து கவலையாக உள்ளவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் தற்போது நலமாக உள்ளேன். எனக்கு சோர்வு மற்றும் வைரஸ் காய்ச்சல் பீடிக்கப்பட்டிருந்தது' என்று தெரிவித்துள்ளார்.

பிபாஷா நடித்து அண்மையில் வெளியான 'ராஸ் 3' திரைப்படத்தின் வெற்றியை அவர் உடல் நலம் தேறிய பிறகு கொண்டாடப்போவதாக தெரிவித்துள்ளார். தனது நடிப்பை பாராட்டிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X