2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சூர்யாவுடன் குத்தாட்டம் போடும் நயன்தாரா...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


வயது ஏறினாலும், ஏராளமான கிசுகிசுக்கள், காதல் தோல்விகளில் அடிபட்டாலும் நயன்தாராவின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை. தமிழில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. அதுவும் முதல்நிலை நடிகர்களின் திரைப்படங்களில்.

அப்படி அண்மையில் அவரைத் தேடி வந்துள்ளது சூர்யாவின் சிங்கம் 2 திரைப்பட வாய்ப்பு. ஹரி இயக்கும் இந்த திரைப்படத்தில் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் ஹன்ஸிகா நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் குத்துப் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதில் சூர்யாவுடன் ஆட நயன்தாராவை அழைத்துள்ளனர். ஆனால் இன்னும் தன் முடிவைச் சொல்லவில்லையாம் நயன்தாரா.

சூர்யாவுடன் ஏற்கெனவே அவர் நடித்தவர் என்பதால், இந்த வாய்ப்பை மறுக்கமாட்டார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் இயக்குநர். நயன்தாரா ஏற்கெனவே சிவாஜி திரைப்படத்தில் ரஜினியுடன் பல்லேலக்கா பாட்டுக்கு ஆடினார். அதற்கு முன் விஜய்யுடனும் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .