2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அனுஷ்காவிடம் பாடம்கற்ற ஆர்யா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் திரைப்படம் 'இரண்டாம் உலகம்'. அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்றது.

80க்கும் மேற்பட்ட ஆண்கள் மத்தியில் ஒரே பெண்ணாக இருந்து எந்த குறையும் சொல்லாமல் சமத்தாக நடித்துக் கொடுத்துள்ளார் அனுஷ்கா என்று நடிகர் ஆர்யா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்ல, அனுஷ்காவிடம் ஆர்யா நல்ல பாடமும் கற்றுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிக்க வரும் முன்பு அனுஷ்கா யோகா வகுப்புகள் நடத்தி வந்தார் என்பது நாம் அறிந்ததே. மேலும் படப்பிடிப்பில் அவர் பலருக்கு யோகா கற்றுத் தருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஜோர்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அனுஷ்கா, ஆர்யாவுக்கு யோகா கற்றுக்கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியவுடன் ஆர்யா தினமும் யோகா செய்ய ஆரம்பித்துவிட்டாராம். ஜோர்ஜியாவில் கற்ற யோகாவை சென்னைக்கு வந்ததும் சின்சியராக செய்து வருகிறாராம் ஆர்யா.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X