2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹன்ஸிகாவின் இஷ்க்...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழில் 'வேட்டை மன்னன்', 'வாலு', 'சிங்கம் 2' என பெரிய திரைப்பட வாய்ப்புகளைக் கையில் வைத்துள்ள நடிகை ஹன்ஸிகா, தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் பிரபல நடிகையும் எம்.பி.யுமான ஜெயப்பிரதா ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவரது உறவினர் சித்தார்த் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'இஷ்க்' என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஹன்ஸிகா. ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவதாக ஜெயப்ரதா அறிவித்துள்ளார்.

சென்னையில் ஜெயப்ரதாவுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. ராஜ், ஜெயப்ரதா என இரு திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. இப்போது அவை மூடப்பட்டுவிட்டன. விரைவில் அவற்றை மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் ஜெயப்பிரதா.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X