2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முத்தம், கவர்ச்சிக்கு நோ சொன்ன த்ரிஷா...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தி திரைப்படங்களில் ஏக கவர்ச்சியும் முத்தக் காட்சிகளும் இருப்பதால் அந்தக் கதைகளை நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

அசின், ஜெனிலியாவைப் பார்த்து த்ரிஷாவுக்கும் பொலிவூட்டில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. விளைவு, 2010இல் காட்டா மீட்டா இந்தி திரைப்படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார். அப்படம் படு தோல்வி அடைந்தது. அதன் பிறகு தம்மாத்துண்டு உடையில் போட்டோ ஷூட் செய்து வாய்ப்பு தேடிப் பார்த்தார். ஆனால் எதுவும் அமையவில்லை.

சீச்சீ இந்திப் படம் சரியில்ல... என்று கமெண்ட் அடித்தபடி, மீண்டும் தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தினார். தற்போது சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை என மூன்று தமிழ் படங்கள் கைவசம் உள்ளன.

இதற்கிடையில் இந்தி இயக்குனர்கள் சிலர் த்ரிஷாவை அணுகி தங்கள் படங்களில் நடிக்க அழைத்துள்ளனர். இம்ரான் ஹஷ்மி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க அழைத்தனர். அவற்றின் கதைகளை கேட்ட திரிஷா, 'என்ன இவ்ளோ கவர்ச்சி சீன்ஸ் வச்சிருக்கீங்க... தாறுமாறா முத்தக் காட்சி வேற இருக்கு... நமக்கு இது ஒத்துவராது' என்றாராம்.

உங்க போட்டோஸ் பாத்துதான் இந்த கதைக்கு நீங்க செட் ஆவீங்கன்னு நெனச்சோம் என்றார்களாம் பதிலுக்கு. அது அப்போ... இனி நோ கவர்ச்சி என்று கறாராக சொல்லிவிட்டாராம் த்ரிஷா.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X