2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குத்தாட்டம்போட மறுக்கும் ஸ்ருதி ஹாஸன்...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெலுங்கில் ராம் சரண் தேஜா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடவில்லை என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவின் 'நாயக்' திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் பொய்யானது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் சமூக வலையமைப்பில் கூறியிருப்பதாவது,

'நான் தெலுங்கு திரைப்படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடுகிறேன் என்பதெல்லாம் வெறும் வதந்தி. நான் பிஸியாக உள்ளேன். 'பலுப்பு' படப்பிடிப்பு துவங்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி தற்போது சம்திங் சம்திங் இந்தி ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை ரீமேக் மன்னன் பிரபுதேவா இயக்கி வருகிறார். இது தவிர ஸ்ருதி தெலுங்கில் ரவி தேஜாவுடன் பலுப்பு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட பொலிவூட் நாயகிகள் போட்டி போடும்போது இந்தியில் பெயர் எடுக்க விரும்பும் ஸ்ருதி குத்தாட்டம் போட மாட்டேன் என்று கூறியுள்ளது ஆச்சரியமாக உள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X