2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஜெய் தூக்கத்தை கெடுத்த நயன்...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


நயன்தாரா மற்றும் ஆர்யா மீண்டும் ஜோடி சேரவுள்ள புதிய திரைப்படமொன்றில் மற்றுமொரு கதாநாயகனாகத் தெரிவாகியுள்ளார் 'சுப்பிரமணியபுரம்' ஹீரோ ஜெய் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் நயன்தாராவை அவர் காதலிப்பதைப்போல் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் அவர்களுக்கு ஒரு டூயட் பாடல் கூட இருக்கிறதாம்.

நயனுடன் காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது? அவருடன் எப்படி டூயட் பாடுவது என்று ஜெய்க்கு ஒரே படபடப்பாக உள்ளதாம். இரவில் கண்ணை மூடினாலும் அந்த படப்படப்பு அடங்காமல் இருக்கிறதாம். அதனால் அவர் தூக்கமில்லாமல் தவித்து வருகிறாராம்.

அட்லீ எடுக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கிறது. முக்கோண காதல் கதை கொண்டது இத்திரைப்படம்.

ஆர்யா இரண்டாம் உலகத்தில் பிஸியாக இருப்பதால் அவர் வரும் வரை ஜெய், நயன்தாரா வரும் காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையிலேயே, அவ்வளவு பெரிய நடிகையுடன் நடிக்கப் போகிறோமே என்று ஜெய் ஒருவித டென்ஷனில் உள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • nan E... Saturday, 29 September 2012 12:16 PM

    ellam oru nadiffuthan......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X