2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அனுஷ்காவின் தாராளம்...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


உயர்ந்த நடிகை அனுஷ்கா அவரது செயலாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். நடிகை அனுஷ்காவுக்கு பெரிய மனசுங்க. தெலுங்கில் அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார்.

தன்னுடன் இருக்கும் திருநங்கைக்கு தான் நடிக்கும் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களைக் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார். புடப்பிடிப்பில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தருகிறார்.

இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள் தான். தற்போது அனுஷ்காவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது அவர் தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளாராம். 

என்ன தான் நீண்ட காலமாக டிரைவராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா சற்றே வித்தியாசமானவராகத் தான் உள்ளார். அவர் தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .