2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தப்ஸிக்கான அடுத்த மோதல்...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனுசுடன் 'ஆடுகளம்', ஜீவாவுடன் 'வந்தான் வென்றான்', போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தப்ஸி. இவருக்கும் 'மங்காத்தா' திரைப்படத்தில் நடித்த மகத்துக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவும் தப்ஸியை காதலித்ததாக கூறப்பட்டது.

இதனால் சென்னையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் மகத்தும், மனோஜ் மஞ்சுவும் அடித்துக் கொண்டனர். மகத் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மனோஜை கைது செய்ய தேடினர். அவர் நீதிமன்றில் முன் பிணை பெற்றுக்கொண்டார்.

ஆனால், இதுபோல் தப்ஸிக்காக இன்னொரு மோதல் உருவாகியுள்ளது. மலையாளத்தில் மம்முட்டி, நதியா, தப்ஸி இணைந்து நடித்த 'டுவின்ஸ்' திரைப்படம் தமிழில் 'புதுவை மாநகரம்' என்ற பெயரில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை விளம்பரம் செய்ய தப்ஸியின் புகைப்படங்களுடன் சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இதற்கு மனோஜ் மஞ்சுவின் சகோதரி லட்சுமி மஞ்சு, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆதி, தப்ஸி நடித்த 'மண்டல்ல கோதாவரி' என்ற பெயரில் தெலுங்கு திரைப்படமொன்றை தயாரித்து வருகிறேன். அந்த திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட தப்ஸியின் புகைப்படங்களை புதுவை மாநகரம் போஸ்டர்களில் பயன்படுத்தி உள்ளனர். இது கண்டிக்கதக்கது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளேன் என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தப்ஸி கூறுகையில், 'தெலுங்கு திரைப்படத்தில் நடித்த எனது புகைப்படங்களை 'புதுவை மாநகரம்' போஸ்டர்களில் பயன்படுத்தியது எனக்கு தெரியாது' என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X