2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சரித்திர நாயகி அனுஷ்கா...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆந்திராவின் பெரும் பகுதியை 1259ஆம் ஆண்டு முதல் 1289 வரையான காலப்பகுதியில் ஆட்சி செய்த வீராங்கணை ராணி ருத்ர மாதேவி. படைகளைத் திரட்டி எதிரிகளுடன் வீரதீரத்தோடு போரிட்டு வீழ்த்திய பெருமை இவருக்கு உண்டு.

ராணி ருத்ர மாதேவியின் வாழ்க்கையை இயக்குணர் குணசேகர் திரைப்படமாக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில் ராணி ருத்ரமாதேவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்கா தெரிவாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே அருந்ததி திரைப்படத்தில் பிரபலமானவர். சிம்புவுடன் வானம், விக்ரமுடன் தெய்வத்திருமகள் திரைப்படங்களிலும் நடித்தார். ராணி ருத்ரமாதேவி வேடத்துக்கு நயன்தாரா, அனுஷ்கா இருவரும் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்தில் மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்கின்றனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அரண்மனை அரங்குகள் அமைக்கிறார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X