2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஜக்கு பிடித்த 'கேர்ள் ப்ரெண்ட்' காஜல்...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 11 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஜய் - காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்குத் திரைப்படம் 'துப்பாக்கி'. இத்திரைப்;படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

பல தடைகளை தாண்டி ஒருவழியாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது, 

'என்னுடைய அப்பாவுக்கு நான் இங்கே நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த திரைப்படத்துக்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர் தாணு ஆகியோரை ஏற்பாடு செய்து கொடுத்தவர் அவர்தான்.

நான் 'குஷி' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே ஏ.ஆர்.முருகதாஸை எனக்குத் தெரியும்.

அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். அற்புதமாக கதை சொல்லக்கூடியவர். என்னை மிகவும் கவர்ந்த இயக்குனர்.

இத்திரைப்படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால். இவர் தன்னுடைய பெயரிலேயே இனிப்பை (அகர்வால் ஸ்வீட்) வைத்திருக்கிறார். எனக்கு பிடித்த 'கேர்ள் ப்ரெண்ட்' காஜல் அகர்வால் என்றார்.

இது அங்கிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் சிறிது நேரம் கழித்து விஜய், 'இப்படி ஒரு வசனம் இப்படத்தில் வருகிறது' என்று அனைவரையும் கலகலப்பூட்டினார்.





You May Also Like

  Comments - 0

  • Test Friday, 12 October 2012 02:57 AM

    என்ன மச்சான் ரூட்டா............. உன்களுக்கு மனைவி பிள்ளைள் இருக்கு.. கொலைவிழும்.

    Reply : 0       0

    shazma Nisha Thursday, 18 October 2012 09:15 AM

    சூப்பர் படம் ஆக இருக்கும் என அனைவரும் எதிர் பார்க்கப்படுகிறது...........................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X