2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஷாலுடன் ஜோடி சேர்கிறார் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 13 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நடிக்க வருகிறார். விஷால் ஜோடியாக 'பட்டத்து யானை' திரைப்படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த திரைப்படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். இவர் விஷால் நடித்த மலைக்கோட்டை திரைப்படத்தை இயக்கியவர்.

அர்ஜுன் மனைவி நிவேதிதா திருமணத்துக்கு பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனவே மகளை சினிமாவுக்கு கொண்டு வர அர்ஜுன் சம்மதிப்பாரா என்பதில் சந்தேகம் இருந்தது. 'பட்டத்து யானை' திரைப்படத்தின் கதையை அர்ஜுன் திரைப்படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் உருவாக்கி இருந்தார்.

இதில் அர்ஜுன் மகள் நாயகியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் கருதினார். இதையடுத்து அர்ஜுனை அணுகி கதை சொன்னார்கள். அவருக்கு பிடித்தால் மகள் நடிக்க அனுமதி அளித்தார்.

படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. மைக்கேல் ராயப்பன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இவர் நாடோடிகள் திரைப்படத்தை தயாரித்தவர். அர்ஜுன் மகளுக்கு தற்போது நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நடிப்பு கல்லூரி ஆசிரியர்கள் அவருக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0

  • santhosh Saturday, 19 July 2014 06:16 PM

    ஐஷ் வந்தா சந்திக்கனும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X