2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாற்றானில் மாற்றம்...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான் திரைப்படத்தின் நீளம் இப்போது 21 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றான் திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. மேலும் திரைப்படம் மிக நீளமாக உள்ளதாகவும், இடைவேளைக்குப் பிறகு போரடிப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது.

திரைப்படத்தின் நீளம் மொத்தம் 2 மணித்தியாலங்களும் 47 நிமிடங்களுமாகும். எனவே திரைப்படத்தில் போரடிக்கும் காட்சிகளை அகற்றிவிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்தது. அதன்படி 21 நிமிடக் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் திரைப்படத்துக்கு வெகு சிறப்பான ஆரம்பம் கிடைத்ததால், உலகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களில் மட்டும் ரூ.19 கோடியை மாற்றான் வசூலித்துள்ளதாக பொக்ஸ் ஒபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவிலும் இதுவரை ரூ.2.86 கோடியை இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம். விடுமுறை நாட்கள் அதிகம் உள்ளதாலும், திரைப்படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாலும் இனி வசூல் அதிகரிக்கும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X