2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அடுத்த சிம்ரன் யார்? போட்டிக் களத்தில் ஐவர்...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ்த் திரையுலகில் 'கொடியிடை அழகி'யாக வர்ணிக்கப்பட்டவர் நடிகை சிம்ரன். அனைவரது மனங்களிலும் இடையழகியாகவும் கனவுக் கன்னியாகவும் நீண்ட காலம் நீங்காத இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட நடிகைகளுள் சிம்ரனுக்கு தனியிடம் உண்டு.

நடிப்பு, நடனம் என தனக்கென தனியொரு திறமையைக் கொண்டிருந்தார். திருமணத்துக்காக சினிமாவுக்கு அவர் இட்ட முற்றுப்புள்ள தமிழ்த் திரையுலகுக்கு மாத்திரமல்ல, தமிழ் ரசிகர்களையும் பாரியதொரு ஏமாற்றத்துக்குள் தள்ளிவிட்டது.

சிம்ரன் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்புவதற்கு பல நடிகைகள் தங்களது அயராத முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை என்னவோ சிம்ரன் வயப்பட்டிருந்த ரசிகர்களைக் கவரவில்லை என்றே கூறவேண்டும்.

சரி நடிப்பு, நடனத்தில் தான் சிம்ரனை மிஞ்ச முடியவில்லை. இடையழகிலாவது அவரை மிஞ்சிவிடுவோம் என்று அந்த இடை விடயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்கள் சிலர்.

அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் 'நண்பன்' நாயகி இலியானா, அவரைத் தொடர்ந்து ஸ்ரேயா, காஜல் அகர்வால், தமன்னா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் அப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தமிழ்த் சினிமாவின் அடுத்த சிம்ரன் யார்? என்ற கேள்விக்கு விடை கொடுக்க இவர்கள் ஐவரும் போட்டு வரும் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்று அனைத்து சினிமா உலகமும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றதாம்.






You May Also Like

  Comments - 0

  • Posan Raja - Makkun Tuesday, 30 October 2012 02:31 AM

    யார்யா சிம்ரன் நடிப்பை பார்த்தாங்க எல்லாம் இடுப்பதானே பார்த்தாங்க.

    Reply : 0       0

    Razu Tuesday, 06 November 2012 06:27 AM

    சிம்ரன் சிம்ரன்தான்... அந்த இடத்துக்கு வேறு யாரும் வர முடியாது....

    Reply : 0       0

    jahith Wednesday, 14 November 2012 05:14 PM

    ellam super

    Reply : 0       0

    suresh Wednesday, 30 January 2013 01:33 PM

    சிம்ரன் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. கோலிவுட் லேடி சூப்பர் ச்டார் சிம்ரன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X