2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

அமலா – ரிஸ்ஸா மோதல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று திரையுலகிலும் கைவசம் நிறைய திரைப்பட வாய்ப்புக்களைப் பெற்று கடுமையான வேலைப்பளுவுடன் காணப்படுகிறார் அமலா போல்.

இதேவேளை, மயக்கம் என்ன, ஒஸ்தி நாயகி ரிஸ்ஸா கந்கோபாத்யாயாவும் தமிழ், தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய பட்ஜட் திரைப்படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், மேற்படி இரு நாயகிகளுக்கும் இடையில் திரையுலகில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் போக்கிரி திரைப்படத்தை இயக்கிய பூரி ஜெகநாத்தின் இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் அமலா போல். இதில் இவருக்கு பிரதான கதாபாத்திரமாம்.

இதேவேளை, நடிகை ரிஸ்ஸாவையும் இத்திரைப்படத்தின் மற்றொரு கதாநாயகியாக தெரிவு செய்துள்ளாராம் இயக்குனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் நடிப்பில் யார் அசத்தப்போவது என்ற மோதலில் அமலாவும் ரிஸ்ஸாவும் கலமிறங்கியுள்ளார்களாம்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .