2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வேதனையில் காஜர் அகர்வால்...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மாற்றான்' படப்பிடிப்பை அடுத்து மேலும் சில தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக உள்ளார் நடிகை காஜர் அகர்வால். விஜய்யுடன் நடித்த 'துப்பாக்கி' தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில்,  கார்த்தியுடன் 'ஆல் இன் அழகு ராஜா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மூன்று திரைப்படங்களை கைவசம ; வைத்துள்ளார்.

இந்நிலையில், தன்னைப் பற்றிய வதந்திகள் பரவுவதாக காஜல் அகர்வால் வேதனையுடன் உள்ளார்.

'என்னைப்பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் என்னால் விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. சில திரைப்படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டதாகவும், பத்திரிகையாளர்களிடம் இருந்து விலகி இருப்பதாகவும் செய்தி பரவியுள்ளன.

இவற்றில் உண்மை இல்லை. பிஸியாக நடிப்பதால் நேரம் கிடைப்பதில்லை. தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

தெலுங்கில் ரவிதேஜா, ஜுனியர் என்.டி.ஆர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.
மகேஷ்பாபு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக பேசுகின்றனர். நான் ஏற்கனவே ஒப்பந்தமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

கோல்ஷீட் கொடுத்தபடி திரைப்படங்களில் நடிக்கிறேன். எனது திகதிகளை வீணடித்தால் நான் பொறுப்பாக முடியாது' என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X