2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காஜலின் அதிர்ஷ்ட சின்னம் கார்த்தி...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 06 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவின் தற்போதைய கலக்கல் ஜோடி என பெயரெடுத்துள்ளவர்கள் கார்த்தி – காஜல் அகர்வால். 'நான் மகான் அல்ல' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்த இந்த ஜோடியை வைத்து பல விளம்பரப் படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. ராஜேஷின் புதிய திரைப்படமாக 'ஆல் இன் ஆள் அழகுராஜா' திரைப்படத்திற்கும் இவர்களிருவரையே ஜோடியாக தெரிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில் கார்த்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காஜல், 'கார்த்தி மிகவும் இயல்பானவர். அவர் படப்பிடிப்புக்கு வந்தால் படப்பிடிப்பு நிலையமே கலகலப்பாக இருக்கும். என்னைப் பொருத்தவரையில், கார்த்தி என்னுடைய அதிர்ஷ்ட சின்னம் என்றே கூறுவேன். காரணம், எமது ஜோடிப்பொருத்தத்துக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளது' என்று கூறியுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கி திரைப்படத்தில் நடித்த அனுபவம் தொடர்பில் கூறியுள்ள காஜல், ''துப்பாக்கி' திரைப்படத்தில் பொக்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சிறுவயதில் பொக்சிங் கற்றுள்ளேன். விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அதை கற்கவில்லை. உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காகவே பொக்சிங் வகுப்புக்குச் சென்றேன். அது 'துப்பாக்கி' திரைப்படத்துக்கு உதவி உள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மேரிகோம் என்னை கவர்ந்தவர். அவரை முன்மாதிரியாக வைத்தே இத்திரைப்படத்தில் நடித்துள்ளேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மரத்தை சுற்றி கதாநாயகனுடன் டூயட் பாடுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த இமேஜை விடவும் முடியாது.

'துப்பாக்கி'யில் அதிகமாக சண்டை போடவும் இல்லை. ஒரு எல்லைக்குள்தான் இருந்தேன். விஜய்தான் பயங்கர சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். 'துப்பாக்கி' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகுமா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை இந்தியில் இந்த திரைப்படத்தை எடுத்து அதிலும் என்னையே நடிக்க அழைத்தால் ஏற்றுக்கொள்வேன்' என்று கூறியுள்ளார்.








You May Also Like

  Comments - 0

  • Aashik Monday, 12 November 2012 04:48 AM

    இந்த ஜொடி கஜல்-கார்தி மிஹ மிஹ பொருத்தமானது என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X