2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காயமடைந்தார் அஜீத்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 07 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் புதிய திரைப்படமொன்றில் அஜீத் - நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதன் படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியொன்றில் நடிகர் அஜீத் காயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு தாவுவது போன்று அமைக்கப்பட்ட காட்சியின் போதே அஜீத் காயமடைந்துள்ளார்.

25 அடி உயரத்துக்கு மேல் குதிக்க வேண்டாம் என்று இயக்குநர் அறிவுறுத்தினார். ஆனாலும், டூப் போடாமல் இந்த சண்டை காட்சியில் அஜீத் நடித்தார்.

அப்போது அவரது கால் காரின் முன்பக்க டயரில் சிக்கி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்த காட்சியை எடுத்த போது சக நடிகர்கள் அருகில் இல்லை என்றும் தகவல் அறிந்ததும் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலர் அஜீத்திடம் நலம் விசாரித்துள்ளனர்.

அஜீத்துக்கு ஏற்பட்ட காயத்தின் வலி தற்போது குணமாகி மீண்டும் அவர் நடித்து வருவதாக படப்பிடிப்பு குழுவினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X