2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஜெக்கி சானின் கடைசி திரைப்படம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 29 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாக்கி சான் நடித்துள்ள 101ஆவது திரைப்படம் 'சி இசட் - 12'. அவர் நடிக்கும் கடைசி அக்ஷன் திரைப்படம் இதுவாகும். 

'எனக்கு வயதாகி விட்டதால் இனி அக்ஷன் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் இதுவே என் கடைசி அக்ஷன் திரைப்படம்' என்று ஜெக்க சானே அறிவித்துள்ளார்.

ஆர்மர் ஒப் காட்டின் தொடர்ச்சிதான் இத்திரைப்படத்தின் கதை. அபூர்வமான ஒரு பழங்கால பொருளை திருட பல்வேறு குழுக்கள் திட்டமிடுகின்றன.

அந்த பொருள் கையில் இருந்தால் உலகையே ஆளலாம். அதை யார் கைக்கும் போகவிடாமல் தடுத்து அரசிடம் சேர்ப்பது ஜெக்கி சானின் பணி. ஏனைய திரைப்படங்களில் இல்லாத சில சிறப்பு அம்சங்கள் இந்த திரைப்படத்தில் உண்டு.
 
ஜெக்கி சான் திரைப்படங்களிலேயே இதுதான் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது ஜெக்க சானின் இரண்டாது 3டீ திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெக்கி சானின் திரைப்படத்தில் பெரும்பாலான நடிகர்கள் சீனர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகி தவிர்ந்த ஏனைய அனைவரும் ஹொலிவூட் நடிகர்கள்.

முந்தைய திரைப்படங்களை விட ஜெக்கி சான் இந்த திரைப்படத்தின் விளம்பரத்துக்காக உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X