2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மீண்டும் மீரா...

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 01 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ், மலையாள திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த மீரா ஜாஸ்மீனுக்கு அண்மைக் காலமாக திரைப்பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இறுதியாக 'இளைஞன்', 'மம்பட்டியான்' போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பிறகு திரைப்படங்களில் அவரை காணமுடியவில்லை.

மலையாள திரைப்படங்களிலும் அவர் இல்லை. மீரா ஜாஸ்மீனுக்கும், மொண்டலின் இசைச் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் காதலரை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போடப்போவதாகவும் செய்திகள் பரவின.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மீரா ஜாஸ்மீன் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் 'லிசமாயிடே வீடு' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கும் 'நதிகள் நனைவதில்லை' திரைப்படத்தில் நடிக்கவும் பேசி வருகின்றனர். சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வர களம் இறங்கி உள்ளார் மீரா.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X