2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பூஜா ரகசிய திருமணம்?

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


உள்ளம் கேட்குமே திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தாலும் பாலாவின் 'நான் கடவுள்' அவருக்கு தேசிய விருது பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்க வைத்தது. இருப்பினும் மாநில விருதே கிடைத்தது.

அதன் பிறகு பூஜா எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியாததால் வாய்ப்பு கொடுக்க நினைப்பவர்களும் அவரை நெருங்க முடியவில்லை என்று சினிமா உலகம் தெரிவித்து வந்தது.

இறுதியாக கிடைத்த தகவல்களின்படி அவர் பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் கம்பனியில் உயரதிகாரியாக இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகனை பூஜா திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

பூஜா இலங்கையை சேர்ந்தவர். அம்மா சிங்களவர், அப்பா தமிழர். தற்போது அவர் சிங்கள திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், சிங்களவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இலங்கையிலேயே குடியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் எது உண்மை, எது வதந்தி என்பதை பூஜா சொன்னால்தான் தெரியும் என்கிறது திரையுலகம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X