2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நவரச நாயகனின் வாரிசு...

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரச நாயகன் எனப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கின் முதல் சினிமா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். 'கடல்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளவர் கௌதம் கார்த்திக். ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும், ஊடகங்கள் அதிகமாக பரபரக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கௌதமின் புகைப்படங்களை வெளியிடாமல் வைத்திருந்தார் இயக்குனர் மணிரத்னம்.

இடையில் ஒருமுறை கௌதமின் புகைப்படமொன்று வெளியாகிவிட, பதறிப்போன மணிரத்னம், அதை நீக்கச்சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறாக கடல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தாகிவிட்டது.

எனவே தினத்துக்கு ஒரு புகைப்படமாக வெளியிட ஆரம்பித்துள்ளனர் திரைப்படக் குழுவினர். சில தினங்களுக்கு முன்பு கடல் திரைப்படத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கௌதமின் முகத்தைக் காண்பிக்காமல் ஸ்டில்லை வெளியிட்டார் மணிரத்னம்.

இப்போது அதிலிருந்து சற்று முன்னேறி, கௌதம் முகத்தை ஓரளவு காட்டியபடி உள்ள வடிவமைப்பொன்றை வெளியிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் இதே பாணியில் 'கடல்' திரைப்படத்தின் கதாநாயகியான ராதாவின் இளைய மகள் துளசியின் முகத்தையும் காட்டப்போகிறாராம் மணிரத்னம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X