2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமணத்துக்கு முன் சேர்வதில் தவறில்லை: இலியானா

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 08 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மனதுக்கு பிடித்தவருடன் நட்பு பாராட்டுவது, டேட்டிங் செல்வது தப்பில்லை. நான் நவீன காலத்து பெண். என்னைப்பற்றி யார் என்ன கூறினாலும் அதுபற்றி கவலை இல்லை. சொல்பவர்கள் ஏதாவது ஒரு குறையை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது' என்று தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகை இலியானா.

கேடி தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு சென்றுவிட்டார். தமிழில் திரைப்பட வாய்ப்புகள் வந்தபோது ஏற்க மறுத்தார். இந்நிலையில் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் அதிக சம்பளம் பேசப்பட்டதால் அதில் மட்டும் நடித்தார். இப்போது பொலிவூட்டில் நடித்து வருகிறார்.

ஹொலிவூட் கலாசாரம் மெதுவாக பொலிவூட், கொலிவூட்டுக்கு பரவி உள்ளது. நட்பாக பழகும் கதாநாயகன், கதாநாயகிகள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும் பின்னர் பிரிந்து செல்வதும் திரையுலகில் சாதாரணமாகிவிட்டது.

இதன் பின்னணியில் பிரபுதேவா - நயன்தாரா ஜோடி சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரேக் அப் ஆயினர். அதேபோல் சித்தார்த் - ஸ்ருதி ஜோடியும் இந்த பாணியை பின்பற்றினார்கள். பொலிவூட்டில் சைப் அலிகான் - கரீனா கபூர் ஜோடி 5 ஆண்டுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்தனர். அண்மையில்தான் இவர்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்டனர். 'மதராச பட்டினம்' எமி ஜாக்சன் - இந்தி நடிகர் பிரதீக் ஆகியோரும் இதேபோல் வாழ்ந்து பின் பிரிந்தார்.

இந்த பாணியிலான வாழ்க்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் இலியானா. இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் இலியானாவுக்கும் ஷாஹித் கபூருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகின்ற நிலையிலேயே மேற்கண்டவாறானதொரு கருத்தினை வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.



You May Also Like

  Comments - 0

  • abu suaadh Wednesday, 12 December 2012 04:09 AM

    செய்வதெல்லாம் செய்துவிட்டு மீடியா கருத்து சொல்ல முன்னர் இவ‌ளே தன் தவறை ஒப்புக் கொன்டு தான் விவபச்சாரம் செய்து வருவதை பகிரங்கமாக கூரியுள்ளார். நல்ல முன்னேற்றம்.

    Reply : 0       0

    hhhh Friday, 14 December 2012 04:00 PM

    பரவா இல்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X