2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'துப்பாக்கி' வில்லனுக்கு புதிய அங்கீகாரம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 10 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பில்லா – 2' திரைப்படத்தில் ஆர்ப்பாட்டமின்றி, அமைதியான வில்லனாக நடித்து, ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த வித்யுத் ஜம்வால், அடுத்ததாக நடித்த, 'துப்பாக்கி'யில் பார்வையாலேயே மிரட்டி ரசிகர்களைக் கொள்ளைகொண்டார். ஸ்டைலிஷ்ஷான இந்த வில்லனுக்கு தற்போது புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தியாவில், சிறந்த உடற்கட்டுள்ள ஐந்து பிரபலங்கள் அண்மையில் தெரிவு செய்யப்பட்டனர். இதில் வித்யுத் ஜம்வாலுக்கும் இடம் கிடைத்துள்ளதாம். வித்யுத்தைத் தவிர, பொலிவூட் நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன், ஜோன் அப்ரஹாம், சல்மான்கான் மற்றும் பிரபல மல்யுத்த வீரர் யோகந்தர் ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

'அதிகமான திரைப்படங்களில் நடிப்பதை விட வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்' எனக்கூறும் வித்யுத்துக்கு, கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புக்களும் கதவை தட்டுகின்றனவாம்.




You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Tuesday, 18 December 2012 03:27 PM

    வெள்ளித்திரை வில்லன் நிஜத்தில் கதாநாயகன். ஆனால் வெள்ளித்திரை கதாநாயகன் நிஜத்தில் சீரோ...

    Reply : 0       0

    msmyasir Wednesday, 19 December 2012 03:56 AM

    வருக.............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X